எலோன் மஸ்க் உலகின் முதல் டிரில்லியனர்: ஸ்பேஸ்எக்ஸ் பொதுப் பங்கு வெளியீடும், தன்னலக்குழுவின் சமூக முகத்தோற்றமும்
வெள்ளிக்கிழமையன்று, எலோன் மஸ்க் உலகின் முதல் டிரில்லியனர் ஆனார். முதலீட்டு வங்கிகளின் கூட்டமைப்பு ஒன்று, வியாழக்கிழமை இரவு நாஸ்டாக் (Nasdaq) பங்குச் சந்தையில் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) பங்கின் விலையை 135 டாலராக நிர்ணயித்தது. வெள்ளிக்கிழமை வர்த்தகம் தொடங்கியபோது 150 டாலராக எகிறிய பங்கின் விலை, அன்றைய வர்த்தகத்தின் இடையே 30 சதவீதம் வரை உயர்ந்து, இறுதியில் சுமார் 19 சதவீத வளர்ச்சியுடன் 161 டாலராக நிலைபெற்றது. இது நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பை தோராயமாக 2.1 டிரில்லியனாக உயர்த்தியது.
